பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளும், ‘சென்னை 28’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவருமான நடிகை விஜயலட்சுமி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட்டுள்ள மாடர்ன் கிளாசிக் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
முன்னதாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான “நெஞ்சினிலே நெஞ்சினிலே…” பாடலின் பின்னணியில், பாரம்பரிய நகைகள் மற்றும் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் அவர் அசத்தலான நவீன உடையில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
லேடி சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் ஓணம் லுக்! வாயடைத்துப் போன ரசிகர்கள்..!
43 வயதிலும் சற்றும் குறையாத அழகோடு இளமையாகவும் செம ஸ்டைலாகவும் வலம்வரும் விஜயலட்சுமியின் இந்த லேட்டஸ்ட் தோற்றத்தைப் பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது வியப்பையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

