தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கும் அறிவிப்பு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – உதயநிதி ஸ்டாலின் இடையேயான மோதல் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பொருளாதார பலமில்லாத மற்றும் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியைத் தொய்வின்றித் தொடர்வதற்காக அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
மேலும், வாகன பராமரிப்பு மற்றும் டிரைவர் செலவுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளர் படிக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, “திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் தேவையில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.
ஸ்ரீதேவி மட்டும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.. மனம் திறந்த இயக்குநர் ராம்கோபால் வர்மா..!
உதயநிதியின் இந்த அறிவிப்புக்கு பதிலடி தரும் வகையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கார் இல்லை… ரூ.10,000 தான் இருக்கிறது என்று கூட நீங்கள் சொல்வீர்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மேலும், கார் தேவைப்படுபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், கார் இருப்பவர்கள் யாரும் இதற்கு விண்ணப்பிக்கப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

