சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பார்த்திபன், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பேச்சுகளில் அசாத்தியமான புத்திசாலித்தனம் இருப்பதாகப் பாராட்டினார். மேலும் அவரிடம், “நீங்கள் உங்கள் தாத்தா (கலைஞர் மு.கருணாநிதி) மாதிரி அரசியல் வியூகங்களைச் செய்கிறீர்கள்; அதனுடன் சேர்த்து எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கையும், குணத்தையும் கொஞ்சம் பின்பற்றினால் தமிழக அரசியலில் கடைசி வரை நீங்கள்தான் முதலமைச்சர்” என்று தான் நேரில் அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார்.
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்?.. லேட்டஸ்ட் அப்டேட்.. ரசிகர்கள் ஷாக்..!
அரசியல் சாதுரியத்துடன் மக்களின் உணர்வுகளையும், ஏழை எளியோரின் பசியையும் மனிதாபிமானத்தோடு அணுகினால் எதிர்காலத் தமிழ்நாட்டில் மிக நீண்ட காலத்திற்குத் தவிர்க்க முடியாத ஆளுமையாக வலம் வரலாம் என்பதே பார்த்திபனின் கருத்தாக இருந்தது. சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து வாதப் பிரதிவாதங்கள் சூடுபிடித்துவரும் நிலையில், எதிர்காலத் தமிழக அரசியல் களம் விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையேயான நேரடிப் போட்டியாகவே உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுவெளியில் தீவிரமடைந்துள்ளது.

