இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் உறவினரான காவ்யா மாறன் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும், அதற்கான தேதி மற்றும் இடங்கள் இணையத்தில் கசிந்துள்ளதாகவும் கூறி சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்களுக்கும் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள இந்தத் தகவல் குறித்து இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
அப்படியே அம்மாவைப் போலவே இருக்காரே.. இணையத்தை ஆக்கிரமிக்கும் தேவயானியின் மகள்..!
இது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு ஊகச் செய்தி (Rumour) மட்டுமே என்று கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் அனிருத் மற்றும் தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்த காவ்யா மாறன் குறித்த இந்தத் தகவல் இணையத்தில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக, தமிழ் திரையுலகின் உச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் பெயர்கள் இதுபோன்ற சமூக வலைதள வதந்திகளில் அடிக்கடி அடிபடுவது வழக்கமான ஒன்றே என்றும், இதுவும் அத்தகைய ஒரு பொய்யான தகவலே என்றும் சினிமா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

