ரம்பை இலைகள் (Pandan Leaves) வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவக் குணங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். ரம்பை இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம், உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) இயற்கையாகவே சீராக வைத்திருக்க உதவிகரமாக இருக்கும்.
செவ்வாய் தோஷம் நீங்கவும், சஷ்டி விரத பலன்கள் பெறவும் முருகப்பெருமான் வழிபாட்டின் மகத்துவம்..!
வலிகளைப் போக்கும் தன்மை
இதில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் மருத்துவக் குணங்கள் மூட்டுவலி, தலைவலி மற்றும் உடல் வலிகளைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன.
செரிமானத்தை மேம்படுத்துதல்
வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகளைச் சரிசெய்து, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த இலைகள் உதவுகின்றன.
மன அழுத்தம்
சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ரம்பா இலைகளில் இருந்து வரும் வாசனை, மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

