பிரபல நடிகை ஷகிலாவிற்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடிகை ஷகிலாவிற்கு கழுத்துப் பகுதியில் திடீரெனப் பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதிக நேரம் செல்போனை தவறான உடல் நிலையில் (Incorrect Posture) பயன்படுத்தி விளையாடியதே இந்தப் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!
அவர் கழுத்தில் ‘பேண்ட்’ (Neck Collar) அணிந்தவாறு மருத்துவமனையில் இருந்து வெளிவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. மொபைல் போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதும், தவறான கோணத்தில் நீண்ட நேரம் கேம்கள் விளையாடுவதும் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.

