திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இந்து சமய அறநிலையத்துறையின் அறங்காவலர் தேர்வுக் குழுவில் நியமிக்கப்பட்டது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ். ரமேஷ் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தியை பலரும் சினிமா தயாரிப்பாளராக மட்டுமே பார்க்கிறார்கள்; ஆனால், அவர் தனது சொந்தப் பணத்தில் தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கோயில்களில் பல்வேறு திருப்பணிகளைச் செய்துள்ளார். அவரது மாமனார் சீனிவாசன், ஒரு பெரிய தனியார் குழுமத்தின் மூலம் பல நூறு கோடி ரூபாய் செலவில் பல்வேறு கோயில் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!
கோயில் திருப்பணிகளிலும் ஆன்மிகத்திலும் தீவிர ஈடுபாடு காட்டும் இது போன்ற குடும்பங்களையும் தனிநபர்களையும் ஊக்கப்படுத்தி அங்கீகரிக்கும் வகையிலேயே இந்தக் குழுவில் அவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்துள்ளார்.

