இயக்குநர் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ள முதல்-அமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தனது தாயார் சங்கீதா குறித்துப் பல சுவாரஸ்யமான மற்றும் நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனது சினிமா மற்றும் கலை முயற்சிகளுக்குத் தாயார் சங்கீதா அளித்து வரும் உறுதுணையும் ஊக்கமும் எந்தளவுக்கு முக்கியமானது என்பதை அவர் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பெற்றோர் குறித்த இவரது இந்தக் கருத்துக்கள் தற்போது சினிமா வட்டாரங்களிலும் இணையத்திலும் பெரும் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது. ஜேசன் சஞ்சய் கூறுகையில், தனது அம்மா சங்கீதா ஒரு “உளவுத்துறை அதிகாரி மாதிரி” செயல்படுவார் என்றும், வீட்டில் நடக்கும் எதையும் அவர் கண்லிருந்து தப்பிக்க முடியாது என்றும் நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!
ஒருமுறை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது யாரிடமும் சொல்லாமல் காரை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் வெளியே சென்றுவிட்டு, தனது செல்போனையும் அணைத்துவிட்டு காலையில் வீடு திரும்பியுள்ளார். அவர் காணாமல் போய்விட்டதாக நினைத்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயாராக இருந்த நிலையில், வீடு திரும்பிய அவரை அம்மா நன்றாகவே விளாசி எடுத்ததாக (வெளுத்து வாங்கியதாக) ஜேசன் சஞ்சய் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளார்.

