Close Menu
    What's Hot

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»பொதுமக்களின் உயிரோடு விளையாடிய இளைஞர்கள்.. 4 ஜென்-ஜி இளைஞர்கள் கைது..!
    கோவை

    பொதுமக்களின் உயிரோடு விளையாடிய இளைஞர்கள்.. 4 ஜென்-ஜி இளைஞர்கள் கைது..!

    Prime ReporterBy Prime ReporterJuly 22, 2026Updated:July 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-kinathukadavu-car-stunt-arrest-sp-pavan-k-reddy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து கொண்டு, பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் ‘டெத் ரேஸ்’ பாணியில் ஆபத்தான சாகசத்தில் ஈடுபட்ட 4 ‘ஜென்-ஜி’ வாலிபர்களைக் கிணத்துக்கடவு காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

    கிணத்துக்கடவு மேம்பாலம் அருகே அதிவேகமாகச் சென்ற காரின் ஜன்னல் வழியே தொங்கியபடியும், காரின் கூரை மீது மூன்று நபர்கள் பயமின்றி அமர்ந்து கொண்டும் சென்ற பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில், இந்தச் சம்பவம் வாகன ஓட்டிகள் இடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.​இந்த அராஜகம் தொடர்பாகச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) பவன் K. ரெட்டி உத்தரவின் பேரில், கிணத்துக்கடவு காவல் துறையினர் சி.சி.டி.வி காட்சிகள் மற்றும் இணைய வீடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் சாகசத்தில் ஈடுபட்ட பீளமேட்டைச் சேர்ந்த சரவணகுமார் (24), இராமநாதபுரத்தைச் சேர்ந்த சென்றாய பெருமாள் (24), மதுரையைச் சேர்ந்த ராகுல்குமார் (19) மற்றும் பாரதி நகரைச் சேர்ந்த நிர்மல்குமார் (24) ஆகிய 4 பேரையும் போலீசார் கூண்டோடு கைது செய்து, சாகசத்திற்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

    போலிஸுக்கு உதவிய மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. குற்றவாளிகளைத் தப்ப வைக்க சதி?..

    ​கைதான நபர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் (Cr.No: 211/2026, U/s 281, 125, 292 BNS r/w 184 MV Act) கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.இளைஞர்கள் தங்களின் உயிரையும், பிற பாதசாரிகளின் உயிரையும் பணையம் வைத்துச் செய்யும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்புகளுக்கே வழிவகுக்கும் எனக் எச்சரித்து உள்ள காவல்துறை இனி பொதுச் சாலைகளில் சாகசம் புரிவோர் மீது இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை பாயும் எனத் தெரிவித்து உள்ளார்.

    மேலும் பெற்றோர்கள் தங்களது வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற விதிமீறல்களைப் பொதுமக்கள் உடனடியாகக் காவல் துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் மாவட்டக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.

    Coimbatore car stunt Coimbatore News Death race stunt arrest Gen Z youngsters arrested Kinathukadavu police SP Pavan K Reddy Traffic violation TN எஸ்.பி பவன் கே ரெட்டி கார் சாகசம் கோவை கிணத்துக்கடவு கோவை போலீசார் டெத் ரேஸ் மோட்டார் வாகனச் சட்டம் ஜென்-ஜி இளைஞர்கள் கைது
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    உதட்டோடு உதடு முத்தம்.. அருவருப்பா இருக்காது.. நடிகர் கருணாஸ் கொடுத்த ஷாக்..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026
    Don't Miss

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    வெளிநாட்டு நிகழ்வில் அரசியல் பெரும்புள்ளியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை வேண்டுமென்றே கலந்துகொண்டு சேட்டை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    எங்களை யாரும் பிரிக்க முடியாது.. வெளிநாட்டில் அரசியல் புள்ளியுடன் உலா வந்த நடிகை..!

    September 21, 2026

    என்ன கண்றாவி இது?.. துண்டை கட்டிக்கொண்டு ஆடிய நடிகர் சித்தார்த்..!

    September 21, 2026

    இந்த வயதில் இது தேவையா? – ரோஜா கேட்ட முத்தம்.. சீக்ரெட்டை உடைத்த கங்கை அமரன்..!

    September 21, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.