நடிகர் ஜீவா ரவி (Jeeva Ravi), முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் கரூரில் ஆற்றிய உரை குறித்துத் தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கரூரில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரையைத் தொலைக்காட்சியில் கவனித்த நடிகர் ஜீவா ரவி, அதைத் தொடர்ந்து தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த உரை குறித்துத் தனது எதிர்வினையைப் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சில் இருந்த வேகம், தெளிவு மற்றும் துணிச்சலைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர் வழங்கிய கனிவான உதவிகளையும், ஒரு தலைவராக அவரது அணுகுமுறையை அவர் சிலாகித்துப் பேசியுள்ளார்.
அரசியலுக்கு வருகிறார் தனுஷ்?.. குழப்பத்தில் ரசிகர்கள்..!
காரை ஓட்டிக்கொண்டே ஒரு பொதுமக்களில் ஒருவராகத் தனது உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ள அவரது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில், குறிப்பாக விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சினிமா பிரபலங்கள் அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் கருத்துகளைப் பகிர்வது அதிகரித்து வரும் நிலையில், ஜீவா ரவியின் இந்தத் தனிப்பட்ட எதிர்வினை அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

