தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், நலிந்த கலைஞர்களை மேம்படுத்தவும் இயக்குனர் சீனு ராமசாமி, முதல்வர் ஜோசப் விஜய் அவர்களிடம் முன்வைத்துள்ள 6 முக்கிய கோரிக்கைகள்.
- கேரளாவைப் போல தமிழ்நாட்டிலும் அரசு தியேட்டர்களை உருவாக்க வேண்டும்; இது சிறிய பட்ஜெட் படங்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும்.
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் ‘திரைப்பட ரசனை’ (Film Appreciation) குறித்த பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
- சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை முன்னிறுத்த, தமிழக அரசு சார்பில் உலகத் திரைப்பட மாநாட்டை நடத்த வேண்டும்.
ஹீரோக்களுக்கு மட்டும் ஏன்?.. சமந்தா விடுத்த கோரிக்கை..!
- படப்பிடிப்பு அனுமதிகளை ஆன்லைன் முறையின் மூலம் எளிதாக்கி, தாமதங்களையும் ஊழலையும் ஒழிக்க வேண்டும்.
- பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பின்னணி இல்லாத திறமையான இயக்குநர்களின் படங்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவி வழங்க வேண்டும்.
- நலிந்த திரைக்கலைஞர்களுக்கான வீட்டு வசதித் திட்டங்களை வேகப்படுத்தி, அவர்களுக்குச் சொந்த வீடுகளை வழங்க வேண்டும்.
லஞ்சம் இல்லாத, வெளிப்படையான ஒரு நிர்வாகத்தை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கையோடு இந்த ஆக்கபூர்வமான கோரிக்கைகளை சீனு ராமசாமி முன்வைத்துள்ளார்.

