நடந்து முடிஞ்ச 2026 சட்டமன்றத் தேர்தல்ல கொளத்தூர் தொகுதியில தோல்வியடைஞ்ச திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திரும்பவும் எம்.எல்.ஏ ஆக திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்ல போட்டியிடப் போறாரா? தமிழக அரசியல்ல இப்ப இதுதான் ஹாட் டாபிக்.
பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!
முதலமைச்சர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்குன்னு ரெண்டு தொகுதியில ஜெயிச்சதால, திருச்சி கிழக்கு தொகுதியை சமீபத்துல ராஜினாமா செஞ்சார். அதனால இப்போ அங்க இடைத்தேர்தல் வரப்போகுது.
இந்த நிலையில, அன்பில் மகேஷ் தலைமையில நடந்த திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்துல, “காலியாக இருக்கும் திருச்சி கிழக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்” அப்படின்னு ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றியிருக்காங்க.
இதைப் பத்தி பத்திரிகையாளர்கள் நேரா மு.க.ஸ்டாலின்கிட்டயே, “திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்க போட்டியிடுறீங்களா?”-ன்னு கேட்டப்போ, அவர் சிரிச்சுகிட்டே எந்தப் பதிலும் சொல்லாம மௌனமாக கடந்து போயிட்டார்.
அந்த மௌனத்துக்கு என்ன அர்த்தம்? ஒருவேளை மு.க.ஸ்டாலின் அங்க களமிறங்கினா, ஆளுங்கட்சியான தவெக-வுக்கு அது பெரிய சவாலா இருக்குமா? என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

