இளம் இயக்குனர் விஷ்ணு எடவண் இயக்கத்தில், பிரதீப் ஆண்டனி முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள ‘பாலன் தி பாய்’ திரைப்படம் வரும் ஜூன் 19 அன்று திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகிறது.
ஜூன் 19 ரிலீஸை முன்னிட்டு, தமிழகத்தின் முன்னணி திரையரங்குகளில் படத்திற்கான அதிகாரப்பூர்வ டிக்கெட் முன்பதிவு (Ticket Booking) தற்போது சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளது.
ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன்.. ஆனா.. – உடைத்துப் பேசிய நடிகை சமந்தா..!
‘கவின் நடித்த டாடா’ மற்றும் ‘கவண்’ படங்களைத் தயாரித்த முன்னணி நிறுவனங்களின் தயாரிப்பில், சுவாரசியமான எமோஷனல் டிராமாவாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், அவரது ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரத்திலும் இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

