Close Menu
    What's Hot

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»கூடங்குளம் வழக்குகளை திரும்ப பெறுக.. தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை..!
    தமிழ்நாடு

    கூடங்குளம் வழக்குகளை திரும்ப பெறுக.. தமிழக அரசுக்கு வேல்முருகன் கோரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterJune 11, 2026Updated:June 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    velmurugan-demands-dismissal-kudankulam-protest-cases
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கூடங்குளம் அணுமின் நிலையப் போராட்டத்தில் தோழர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள 46 வழக்குகளையும் திரும்பப் பெற வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது,

    கூடங்குளம் மக்களை இன்னும் எத்தனை காலம் குற்றவாளிகளாக நடத்தப் போகிறீர்கள்? கூடங்குளம் பகுதியில் வாழும் மீனவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது மண்ணின் பாதுகாப்பிற்காகவும், எதிர்காலத் தலைமுறையினரின் நலனுக்காகவும் முன்னெடுத்த மக்கள் எழுச்சியின் காயங்கள் இன்னும் ஆறாமல் இருக்கின்றன. ஒரு போராட்டம் முடிந்திருக்கலாம்.

    ஆனால் அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மக்களின் வாழ்க்கையைத் துரத்திக்கொண்டிருக்கும் துன்பங்கள் முடிவடையவில்லை. ஆண்டுகள் பல கடந்த பின்னரும், நூற்றுக்கணக்கான குடும்பங்களின் மேல் சட்டச் சுமைகள் தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கின்றன வேலை வாய்ப்புகள் பறிபோயுள்ளன. வெளிநாடுகளுக்குச் சென்று வாழ்வாதாரம் தேடுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. குடும்பங்களின் பொருளாதாரம் சிதைந்துள்ளது.

    மனவேதனையும், எதிர்காலம் குறித்த அச்சமும் இன்னும் அகலவில்லை. ஒரு சனநாயக நாட்டில் மக்களின் குரல் ஒலிப்பது குற்றமல்ல. தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்கள் சமூக விரோதிகளும் அல்ல. ஆனால் அவர்கள் மீது சுமத்தப்பட்ட வழக்குகள், காலம் கடந்தும் நீடிப்பது நீதியின் மீதான நம்பிக்கையையே சோதனைக்கு உட்படுத்துகிறது.

    சட்டமன்றத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாத நிலையில், கூடங்குளம் மக்கள் ஏமாற்றத்துடனும் ஏக்கத்துடனும் காத்திருக்கின்றனர். சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், தற்போது எஞ்சியுள்ள 46 க்கும் மேற்பட்ட வழக்குகள், பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துக்கொண்டே இருக்கின்றன.

    முதல் வழக்கே ஆளுங்கட்சி மீதா?.. எடப்பாடி பழனிசாமி பகீர் கேள்வி..!

    இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதில் என்ன தடைகள் உள்ளன? தமிழக அரசின் விருப்பமின்மையா? ஒன்றிய அரசின் அழுத்தங்களா? அல்லது வேறு நிர்வாகச் சிக்கல்களா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

    எனவே, கூடங்குளம் மக்களின் நீண்டகால துயரத்திற்கும் மனவேதனைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தோழர் சுப. உதயகுமாரன் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மீது எஞ்சியுள்ள, அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Kudankulam Anti Nuclear Protest Kudankulam Fishermen Issue Kudankulam Protest Cases Suba Udayakumar Kudankulam Tamil Nadu Government Petition TVK Velmurugan Twitter Velmurugan Slams Central Govt அணுமின் நிலைய போராட்டம் கூடங்குளம் மீனவர்கள் வாழ்வாதாரம் கூடங்குளம் வழக்குகள் திரும்பப் பெறுக சுப உதயகுமாரன் கூடங்குளம் தமிழக அரசு வழக்கு ரத்து தமிழக வாழ்வுரிமை கட்சி செய்திகள் வேல்முருகன் எக்ஸ் பதிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    27 ஆண்டுகால திருமண வாழ்க்கை முறிவு?.. விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    June 15, 2026

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    June 13, 2026

    ராகவா லாரன்ஸ் ‘இந்த’ துறைக்கு அமைச்சர்?.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!

    June 16, 2026
    Don't Miss

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    நான்-வெஜ் பிரியர்களுக்கு ஏற்ற, ஆந்திரா ஸ்டைலில் நல்ல காரசாரமாகவும் நறுமணத்துடனும் செய்யப்படும் சுவையான பூண்டு சிக்கன் வறுவல் எளிய செய்முறை இதோ.

    இரத்த அழுத்தத்திற்கு குட்-பை.. ‘இந்த’ ஒரு மேஜிக் டீயை ட்ரை பண்ணுங்க..!

    June 16, 2026

    வறண்ட மற்றும் பொலிவிழந்த சருமத்திற்கு குட்-பை.. மேஜிக் மாஸ்க்குகள்..!

    June 16, 2026

    முன்னோர்களின் படங்களை பூஜை அறையில் வைக்கலாமா?.. அமேசிங் வாஸ்து முறைகள்..!

    June 16, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.