Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!
    தமிழ்நாடு

    காவிரி உரிமையைத் தாரைவார்த்துவிட்டதா தமிழக அரசு?.. எடப்பாடி பழனிசாமி சாடல்..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026Updated:May 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    eps-questions-dmk-firm-stand-mekedatu-dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசை எதிர்க்கத் துணிவில்லாமல், திமுக அரசு மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதாக எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் @DKShivakumar தெரிவித்துள்ளார். காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும், அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி மாறினும் மாறாத காட்சியாகவே உள்ளது.

    தமிழ்நாட்டை தற்போது ஆண்டுவரும் அரசு காங்கிரஸ் தயவில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் பொய்க்கால் குதிரை அரசாக செயல்படுவதால், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எதிர்த்து “திடமான” நிலைப்பாடு எடுத்து பேச முடியுமா? மேகதாதுவில் பூமி பூஜை வரை பேசுவதற்கு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எங்கிருந்து தைரியம் வருகிறது ? தங்களால் ஆட்டுவிக்கப்படும் அரசு தான் தமிழ்நாட்டில் உள்ளது என்ற எண்ணமா ? காங்கிரஸ் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி நதிநீர் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதாரம் ஆகும். டெல்டா உள்ளிட்ட பல மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி 20 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரியாறு விளங்கி வருகிறது. மேகதாதுவில், காவிரியின் குறுக்கே அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். காவிரி தொடர்பாக தமிழகத்தின் உரிமை விட்டுக்கொடுக்கப்படுவதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒருநாளும் அனுமதிக்காது.

    கர்நாடக துணை முதல்வரின் இப்பேச்சு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசு உடனடியாக எடுப்பதுடன், அரசின் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    மேகதாது அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை” என்று கர்நாடக மாநில துணை முதல்வர் @DKShivakumar தெரிவித்துள்ளார்.

    காவிரியில் தமிழகத்தின் உரிமையை மழுங்கடிக்கும் வகையில் கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்படுவதும்,
    அதை தமிழகத்தில் உள்ள அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், ஆட்சி…

    — Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) May 22, 2026

    AIADMK chief EPS press meet Cauvery Water Management Authority updates DMK government stand on Mekedatu 2026 Edappadi Palaniswami Cauvery river dispute EPS questions DMK Mekedatu dam Karnataka Tamil Nadu water sharing அதிமுக பொதுச்செயலாளர் அறிக்கை எடப்பாடி பழனிசாமி காரசார கேள்வி எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை காவிரி நீர் உரிமை தமிழ்நாடு திமுக அரசு காவிரி விவகாரம் மேகதாது அணை விவகாரம் இபிஎஸ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களுக்கான பணிகள் தொய்வின்றித் தொடரட்டும்.. ஸ்டாலின் கொடுத்த அட்வைஸ்..!

    May 22, 2026

    காவிரி விவகாரமும்.. மறைக்கப்படும் உண்மைகளும்.. தமிழக அரசுக்கு அன்புமணி கொடுத்த அலர்ட்!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயுஎம்எல்-க்கு கிடைத்த முக்கிய இலாகாக்கள்..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    தலைமைக் காவலரின் 5 ஆண்டு போராட்டம்.. டிடிவி தினகரன் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்..!

    May 21, 2026

    விஜய் அமைச்சரவையில் இணையும் புதிய முகங்கள்.. 23 பேர் பதவியேற்றனர்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    முதலமைச்சர் விஜய்யின் அதிரடி டீம்.. கோட்டையில் பொறுப்பேற்கும் ‘மாஸ்டர் பிரைன்’கள்..!

    May 22, 2026

    பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு.. சூர்யா குறித்து ஜோதிகா சொன்ன வார்த்தை..!

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.