தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை தேர்தலில் வெற்றி கண்டது. சில கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து தமிழக முதலமைச்சர் விஜய் ஒன்பதாம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில், ஒவ்வொரு துறைவாரியாக அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழக முதலமைச்சர் எந்தெந்த துறைகளுக்கு யார் யாரை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறதாம். அதன்படி, முக்கியமான பொறுப்புகளுக்கு திறமையான அதிகாரிகளை நியமித்து வருகிறார்கள்.
பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!
முன்னதாக, முதலமைச்சர் விஜய் தனது சிறப்பு ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரண்டு பேரை நியமனம் செய்துள்ளார். இதில், ஜான் ஆரோக்கியசாமி அரசியல் வியூ நிபுணர் ஆவர். தமிழக வெற்றிக்கழகம் தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று முன்கூட்டியே கணித்து சொன்னவர். இவரை அரசியல் ரீதியான விவரங்களுக்கான ஆலோசகராக நியமித்துள்ளார்.
இதேபோல், இன்னொரு ஆலோசகரான விஷ்ணு ரொட்டி மற்ற விவரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு ஜோதிடர் ரத்தன் பண்டிட் என்பவர் முதலமைச்சர் சிறப்பு பணி அலுவலகராக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியினரால் விமர்சனம் செய்யப்பட்டதால் அவரது நியமனம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இப்போது ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி சிறப்பு ஆலோசர்களாக முதலமைச்சர் நியமனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

