வெயிலுக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்து உடல் சூடு, மலச்சிக்கல் செரிமான பிரச்சனைகள் உட்பட ஏராளமான பிரச்சனைகளை வரிசையாக சந்திக்க நேரிடுகிறது. இந்த பிரச்சினைகளை தவிர்க்க கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும் நீரூற்றமாக வைத்துக்கொள்ள பல உணவுகள் இருந்தாலும் உடலை குளிர்ச்சியாகும் நீரூற்றமாக வைத்துக் கொள்ள உதவும் இளநீர் மோர் கஞ்சி வகைகள் இருக்கின்றன.
இருந்தாலும், வேறு சில உணவுப் பொருட்களும் கோடை காலத்தில் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. அளவில் சிறியதாக இருக்கும் ஒரு சில விதைகள் பெரிய உதவி புரிகிறது. இந்த விதைகள் குட்டியாக இருந்தாலும், ஒவ்வொன்றிலும் ஊட்டச்சத்துக்கள் மிகுதியாக நிறைந்துள்ளன. அப்படி பெரும்பாலான மக்கள் எடுத்துக் கொள்ளும் இரண்டு விதைகள் உள்ளன.

சியா விதைகள் மற்றும் சப்ஜா விதைகள் இவ்விரண்டும் மற்ற விதைகளை விட பார்க்க அளவில், மிக சிறியதாக இருக்கும். ஆனால், இவை ஏராளமான நார் சத்துக்கள் கொண்டவை மற்றும் உடலை நீரூற்றத்துடன் குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. இருப்பினும், பெரும்பாலானோருக்கு இவ்விரண்டிற்கும் உள்ள வித்தியாசம் குறித்த பல கேள்விகள் தற்போது, வரை இருந்துதான் வருகிறது.
சியா விதைகளின் நன்மைகள்

சியா விதைகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. எனில், இதில் ஒமேகாத்திரி அதிக அளவில் காணப்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு சியா விதை மிகவும் பெஸ்ட் சாய்ஸ். எனில், இதை சிறிய அளவில் உட்கொண்டாலும், நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும். இது தவிர இந்த விதைகளில் நார்ச்சத்தும் புரோட்டின் அதிகமாக உள்ளது. 100 கிராம் சியா விதைகளில் 34 கிராம் நார்ச்சத்து இருக்கிறது.

சியா விதைகளில் உள்ள குடல் இயக்கத்தை மேம்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது. நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி இருக்க செய்யும். இது சர்க்கரை உறிஞ்சுதலையும் மெதுவாகிறது. உடல் பாக்டீரியாவுக்கு ஆதரவாகவும் முக்கியமாக கொலஸ்ட்ராலை குறைக்கவும் இது சிறந்ததாக கருதப்படுகிறது.
சப்ஜா விதைகளின் நன்மைகள்

அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கிறீங்களா?.. தாகம் எடுக்குதுன்னு லிட்டர் கணக்குல குடிக்காதீங்க..!
சப்ஜா விதைகள் நார்ச்சத்து உள்ளது. 100 கிராம் சப்ஜா விதைகளில் 25 கிராம் நார்ச்சத்து ஆனால், இந்த விதை அதிக குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது. எனவே, அசிடிட்டி அல்லது செரிமான தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த விதைகளை எடுக்கும் போது வயிற்றுக்கு இதமாக இருக்கும் அசிடிட்டி அல்லது செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், இந்த விதைகள் எடுக்கும் போது வயிற்றுக்கு இதமாக இருக்கும் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் உதவி புரியும். மற்றும் உடலை நீரூற்றவும் தொடங்கும். குளிர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள உதவி புரியும்.

முக்கியமாக சியா விதைகளை விட சப்ஜா விதைகள் நீரில் ஊற வைத்த 10 நிமிடங்களில் சாப்பிட தயார் ஆகிவிடும். எனவே, இவ்விரு விதைகளுமே உடலுக்கு நன்மைகள் தரக்கூடியது. ஆனால், கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள சப்ஜா விதைகளை சிறந்தது. எனவே, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள நினைப்பவர்கள் சப்ஜா விதைகளை எடை குறைக்க நினைப்பவர்கள் சியா விதைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

