வெள்ளிதிரையில் 2002 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற மௌனம் பேசியதே, இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். முன்னதாக, தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அபியும் நானும் படத்திற்காக தமிழக அரசின் மாநில விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் த்ரிஷா பெற்று இருக்கிறார்.
மெஜாரிட்டி சிக்கலில் விஜய்.. வெங்கட் பிரபு பகிர்ந்த ‘அந்த’ ஒரு வசனம்..!
இதனிடையே, விஜய் மற்றும் சங்கீதா விவாகரத்து சர்ச்சையில் நடிகை த்ரிஷா சம்பந்தப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் இன்னும் சர்ச்சைகளாகவே இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் குறித்தும் பலவிதமான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், ரிசல்ட் வந்த அன்று த்ரிஷா விஜய் வீட்டுக்கு முதல் ஆளாக சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல், விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவிற்கு அவருக்கு முதல் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. விஜய் மேடையில் பேச பேச திரிஷா எமோஷனலாக கேட்டுக் கொண்டிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இது ஒரு பக்கம் இருக்க திருச்சி கிழக்கு தொகுதியில் கண்டிப்பாக த்ரிஷாவை விஜய் காலம் இறக்குவார் என்ற பேச்சுக்களும் கொடிகட்டி பறக்கின்றன. கண்டிப்பாக அவர் தமிழ்நாட்டுக்கு இன்னொரு ஜெயலலிதா தான் என்றும், அடித்து சொல்லி வருகிறார்கள். ஆனால், அதெல்லாம் அந்த அளவுக்கு உண்மை இல்லை என்று தெரியவந்துள்ளது.

அதாவது, திரிஷாவின் பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொன்னியின் செல்வன் படம் பிரமோஷன் சமயத்தில் அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில், அளித்த அவர் அதெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால், அதில் நான் எதுவுமே செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தார்.

