Close Menu
    What's Hot

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?.. அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!
    தமிழ்நாடு

    வாக்குறுதி நிறைவேற்றப்படுமா?.. அன்புமணி ராமதாஸ் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tvk-vijay-cm-social-justice-caste-survey-demand
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

    பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்! தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

    ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல… அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான். மதுவால் தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான். ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

    அதைத் தடுக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே,’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான். அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது.

    எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது, உரிய அளவில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்!

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 10, 2026
    69 Percent Reservation 69 சதவீத இட ஒதுக்கீடு Caste Census Tamil Nadu CM Vijay Social Justice Proportionate Representation Tamil Nadu politics news TVK Govt Drug Eradication Women Safety Special Force தமிழக அரசியல் செய்திகள் தமிழக சாதிவாரி கணக்கெடுப்பு தவெக அரசு போதை ஒழிப்பு பெண்கள் பாதுகாப்பு அதிரடிப்படை முதலமைச்சர் விஜய் சமூக நீதி விகிதாச்சார பிரதிநிதித்துவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஒரே இரவில் பூத்த 24 பிரம்மக்கமல மலர்கள்.. ஆரத்தி எடுத்து வழிபட்ட குடும்பத்தினர்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026
    Don't Miss

    எந்தக் கல்லுக்கு எந்த விரல்?.. ரத்தினக் கற்கள் அணியும் போது கவனிக்க வேண்டிய விதிகள்..!

    June 27, 2026

    ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்களைப் போக்கி நற்பலன்களைப் பெற, எந்தெந்த ரத்தினக் கற்களை எந்த விரலில் அணிய வேண்டும் என்பதற்கான முழுமையான வழிகாட்டி இதோ.

    தேவையில்லாமல் த்ரிஷாவை இழுக்காதீர்கள்.. விவாதப் பொருளான த்ரிஷா (ம) ஆர்த்தியின் புகைப்படம்..!

    June 27, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.