நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக ஜாய் கிரிசல்ட்டா வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனது ஆண் குழந்தைக்கு அவர்தான் அப்பா என்றும் ஜாய் கிரிசல்ட்டா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, அவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிசல்ட்டா வழக்கில் குழந்தைக்கு மரபணு சோதனை நடைபெற்றது.

அதுக்குள்ளே கொண்டாட்டமா?.. முன்கூட்டியே கேக் வெட்டி கொண்டாடிய த்ரிஷா..!
அதில், ஜாய் கிரிசல்ட்டாவின் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என மரபணு சோதனையில் உறுதியாகி உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். ஒரு வழியாக பிறந்திருக்கும் குழந்தை அவருடையது தான் என்பது நிரூபணம் ஆனது. இதனால், அவருக்கு பிறந்த குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பதும் நீதிமன்றத்தின் மூலம் முடிவானது.

இதனால், நிம்மதி ஜாய் அடைந்தார். இத்தனை மாத போராட்டத்திற்கு நீதி கிடைத்துவிட்டதாக நெகிழ்ந்து போனார். பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இந்நிலையில், அழகிய பட்டுப்புடவையில் மணப்பெண் அலங்காரத்துடன் ராஜ மாதா கெட்டபில் அசத்தல் போஸ் கொடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

