ஜெயிலர் முதல் பாகத்தைப் போலவே இந்தப் படத்திலும் பல மொழிகளிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். சமீபத்திய தகவலின்படி, ரஜினிகாந்த் சில சண்டைக் காட்சிகளை மீண்டும் படமாக்க (Reshoot) அறிவுறுத்தியுள்ளார்.
அரசியல்னா சும்மா நினைச்சீங்களா?.. விஜய்யை சாடிய விந்தியா..!
அளவுக்கு அதிகமான சிஜிஐ (CGI) இல்லாமல், ரசிகர்கள் விரும்பும் வகையில் ரஜினியின் ‘ஆரா’ (Aura) மற்றும் மேனரிசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமான ஆக்ஷன் காட்சிகளாக இவை மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், சில கூடுதல் படப்பிடிப்பு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் காரணமாக, படம் 2026 ஆகஸ்ட் 14 (சுதந்திர தின வார இறுதி) அன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
விஜய் – திரிஷா ஆஸ்திரேலியாவில் நிலம் வாங்கினார்களா?.. ஆதாரம் இருக்கு.. பகீர் கிளப்பிய பிரபலம்..!
அப்போது பேசிய அவர் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. விரைவில் படம் திரைக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும், தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது எந்த வார்த்தையும் பேசாமல் கையெடுத்து கும்பிட்டபடி அமைதியாக ரியாக்ஷன் கொடுத்து சென்றார். இது தான் என் பதில் என்று சொல்லும் மாதிரியாக இருந்தது.

