Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..
    ஆரோக்கியம்

    தினமும் 4 சின்ன வெங்காயம்.. எப்படிச் சாப்பிட்டால் முழு பலன் கிடைக்கும்?..

    Prime ReporterBy Prime ReporterApril 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    onion utv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சின்ன வெங்காயத்தில் நிறைய ஆரோக்கிய நன்மைகளும், மருத்துவ குணங்களும் இருக்கிறது. இதனை சாம்பார் வெங்காயம் என்றும் அழைப்பார்கள். சின்ன வெங்காயத்தை சமையலில் சேர்ப்பதன் மூலம் அந்த உணவின் சுவை பல மடங்கு அதிகரிக்கிறது. ஆனாலும், சின்ன வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான ஆரோக்கிய நன்மைகள் உங்கள் உடலுக்கு கிடைக்கும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    ஆரோக்கியம் தான்.. ஆனா? வாழைப்பூ சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

    சின்ன வெங்காயத்தை உணவில் சேர்ப்பதை காட்டிலும் பச்சையாக உண்ணும் போது அதன் பயன்கள் பல மடங்கு உங்களுக்கு கிடைக்கிறது. அதனால், தினமும் ஐந்து பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது உடலில் நிறைந்த ஆரோக்கிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

    onion utv

    பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள்

    • செல்களில் ஏற்படும் பாதிப்பை தடுத்து புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
    • அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் தினமும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வரும் பொழுது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும். இதனால், மூட்டுகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
    • சின்ன வெங்காயத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
    • அதோடு இதில் இருக்கக்கூடிய செலினியம் மற்றும் ஜிங்க் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிக்கவும் செய்கிறது.
    onion utv

    இதய ஆரோக்கியத்திற்கு சின்ன வெங்காயம்

    ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க சின்ன வெங்காயத்தில் உள்ள தாதுக்கள் உதவி புரிகிறது. இதனால், இதய தமனிகளில் பிளாக் உருவாவதை தடுக்க உதவுகிறது. குறிப்பாக, சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு பல மடங்கு உதவி செய்கிறது.

    தினமும் ஒரு கீரை.. எந்தெந்த நோய்களுக்கு எந்தெந்த கீரைகளை சாப்பிட வேண்டும்? முழு விவரம்..!

    நீரிழிவு நோய்க்கு சின்ன வெங்காயம்

    onion utv

    அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தா?.. ஆளி விதைகளின் ஆச்சரியமூட்டும் நன்மைகள்..!

    சின்ன வெங்காயத்தை தினமும் பச்சையாக சாப்பிட்டு வரும் போது அதில் உள்ள சல்பர் உள்ளிட்ட சேர்மங்கள் கணையத்தின் செயல்பாட்டினை அதிகரித்து இன்சுலின் சென்சிட்டிவிட்டியையும் மேம்படுத்துகிறது. குறிப்பாக, இன்சுலின் சென்சிடிவிடி உள்ளவர்கள் தினமும் நான்கிலிருந்து ஐந்து சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வர ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவி புரிகிறது.

    செரிமான ஆற்றலை மேம்படுத்தும்

    இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான ஆற்றலை அதிகரிக்க செய்கிறது. இதனால், மலச்சிக்கல் உள்ளிட்ட அஜீரணம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க முடிகிறது.

    onion utv

    சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சின்ன வெங்காயம்

    இதில் இருக்கக்கூடிய வைட்டமின்கள் ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் சல்பர் உற்பத்தியை தூண்டும் தன்மை கொண்டவை. இதனால் சரும மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மேலும், சரும நோய்கள் ஏற்படுவதையும் இது முற்றிலும் தடுக்கிறது.

    எலும்புகள் வலுவடைய கால்சியம்

    சின்ன வெங்காயத்தில் அதிகம் இருப்பது கால்சியம். இது எலும்புகளை வலுப்படுத்தி அவற்றின் அடர்த்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் ஏற்படும் எலும்பு தேய்மானத்தை குறைக்கிறது.

    சுவாச மண்டலத்தை மேம்படுத்தும்

    onion utv

    சின்ன வெங்காயத்தில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் நுரையீரல் உள்ளிட்ட சுவாச மண்டல பிரச்சனைகளை சரி செய்கிறது. இதனை தினமும் பச்சையாக சாப்பிட்டு வர மூக்கடைப்பு சளி, இரும்பல் மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்கவும் செய்கிறது.

    பக்க விளைவுகள்

    சின்ன வெங்காயத்தை சாப்பிடுவதால் பக்க விளைவுகள் வருவதில்லை. ஆனால், அளவுக்கு அதிகமாக பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்கனவே உள்ள சில உடல் நலப் பிரச்சினைகள் பக்கவிளைவை உண்டாக்கலாம்.

    • மருந்துகள் எடுப்பவர்களுக்கு சில சமயங்களில் உதிரப்போக்கு பிரச்சனையை அதிகரிக்கிறது.
    • நெஞ்செரிச்சல் மற்றும் அசிடியை ஏற்படுத்துகிறது.
    • வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது வாய் துர்நாற்றம் ஏற்படும்.
    • ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
    onion utv

    யாரெல்லாம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

    இரைப்பைக் கோளாறுகள், மலச்சிக்கல், அலர்ஜி நோய், மருந்துகள் எடுப்பவர்கள் சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

    Health Benefits Heart Health Immunity Booster Nutritional Value Sambar Onion Small Onion Wellness Tips ஆரோக்கிய நன்மைகள் இதய ஆரோக்கியம் உடல்நலம் சாம்பார் வெங்காயம் சின்ன வெங்காயம் நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ குணங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சர்க்கரை நோய் வராம இருக்கணுமா? ஒரு நாளைக்கு இதான் லிமிட்..!

    August 29, 2026

    தினசரி உணவில் சேர்க்க வேண்டிய சூப்பர் உணவுகள்..!

    August 29, 2026

    தினமும் ஒரு வால்நட்.. ‘சூப்பர் புட்’னு ஏன் சொல்றாங்க தெரியுமா? வியக்க வைக்கும் பலன்கள்..!

    August 24, 2026

    வலி உங்களை எச்சரிக்கிறது! அலட்சியம் செய்யக்கூடாத அறிகுறிகள்!

    August 22, 2026

    உடலைச் நஞ்சாக்கும் டால்டா.. உடலின் சைலன்ட் கில்லர் டிரான்ஸ் கொழுப்புகள்..!

    August 18, 2026

    இத்தனை மருத்துவ குணங்களா?.. ஆரோக்கியத்தின் பொக்கிஷம் ‘இந்த’ இலைகள்..!

    August 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.