Close Menu
    What's Hot

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மகளுக்கு திகார் என்றதும் பதறி டெல்லிக்கு பறந்தவர் கருணாநிதி… திமுக மீது அதிமுக அட்டாக்!
    தமிழ்நாடு

    மகளுக்கு திகார் என்றதும் பதறி டெல்லிக்கு பறந்தவர் கருணாநிதி… திமுக மீது அதிமுக அட்டாக்!

    Prime ReporterBy Prime ReporterMarch 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Election manifesto, constituency distribution... the main thing Edappadi Palaniswami said..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சத்திருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில், டெல்லியில் சென்று கூட்டணி பேசுகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

    2011 தேர்தலுக்காக, டெல்லியில் தவமாய் தவமிருந்து, காங்கிரஸ் தலைமைக்காக 6 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து, கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை கருணாநிதியும் நீங்களும்?

    உங்கள் குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும், மகளுக்கு “திகார்” என்று காங்கிரஸ் சொல்ல, “பகீர்” என்று பதறிப் போய், வயதான காலத்திலும் டெல்லிக்கு பறந்து போய், தீர்ப்புக்கு சில நிமிடங்கள் முன் சோனியா காந்தியை சந்தித்தவர் தானே கருணாநிதி?

    அறிவாலய மேல் மாடி ரெய்டை பார்த்து பயந்து போய் கீழ் மாடியில் 63 நாயன்மார்களை கொடுக்கிறேன் என்று கூட்டணி பேசியவர் தானே உங்கள் தந்தை?

    தென் தமிழக மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, மக்கள் எக்கேடாய் போனால் என்ன? என்று டெல்லியில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருந்தவர் தானே நீங்கள் ? நீங்கள் எல்லாம் அடுத்தவர்களைப் பார்த்து பேச ஏதாவது அருகதை இருக்கிறதா?

    மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் இல்லத்திற்கு மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் நேரில் வந்து விருந்தில் பங்கேற்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோதெல்லாம் திரு. ஸ்டாலின் கோமாவில் இருந்தாரா என்ன ?

    எங்கள் கூட்டணியை பொறுத்தவரை நாங்கள் பரஸ்பர நல்ல நட்போடு, மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

    Why wasn't a single question asked in Tamil in the SI exam.. Is it a verbal policy.. EPS criticism!

    “டெல்லியின் சம்மதம் பெற்று” என்று ஸ்டாலின் சொல்வாரானால், “ஸ்டாலின் வீட்டிற்கு வந்த ப. சிதம்பரம், UPA ஆட்சியில் திமுக செய்த ஊழல்கள் குறித்த ஆதாரங்களை காட்டி மிரட்டியதில் பணிந்து தான் திமுக காங்கிரஸ் உடன் கூட்டணியை உறுதி செய்தது” என்று நாங்கள் சொல்லலாமா?

    ஸ்டாலின் பேசுவதை எல்லாம் பார்த்தால் ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது… ஒருவன் சந்தையில் ஒரு குதிரையை வாங்கினான். குதிரையை விற்றவன் “இது அற்புதமான குதிரை. ஓடும் நீரைக் கூட வேகமாக கடந்து சென்று கரையைத் தொடும்” என்றான். அந்த வியாபாரி பேச்சை நம்பி குதிரையை வாங்கி , நீரில் விட்ட பிறகே தெரிந்தது, அது மண் குதிரை என்று. மண் குதிரை கரைந்துவிட, நல்வாய்ப்பாக நீச்சல் தெரிந்ததால் எப்படியோ தப்பித்து வந்தான். தப்பித்து வந்த கையோடு , நனைந்து கொண்டே கோபத்தின் உச்சியில் சந்தைக்கு சென்ற அவனைப் பார்த்து அந்த வியாபாரி , “இன்னொரு குதிரை வேண்டுமா?” என்று கேட்டானாம்.

    அந்த வியாபாரி போல தான் ஸ்டாலின். இவர் சொன்ன விடியல் என்ற வார்த்தையை நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றி, மண் குதிரை ஆட்சியை கொடுத்துவிட்டு, மக்களை நட்டாற்றில் தத்தளிக்க விட்டது போதாது என்று, மீண்டும் அதே குதிரையை 2.0 என கூறி கூவி கூவி விற்கப் பார்க்கிறார். ஐயோ… தமிழக மக்கள் பாவமில்லையா ? இவ்வாறு அதிமுக பதிவிட்டுள்ளது.

    Aiadmk CM Stalin Delhi Visit DMK Edappadi Palaniswami Politics அஇஅதிமுக எடப்பாடி பழனிசாமி டெல்லி முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    இதுதான் கலாச்சாரமா?.. விஜய் – த்ரிஷா குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    April 18, 2026

    தமிழக தேர்தல் களத்தை அதிரவைக்கும் த.வெ.க தலைவர் விஜய்யின் பகிரங்க மடல்

    April 18, 2026

    அதுக்கு சரிப்பட்டு வர மாட்டார்.. விஜய்யின் செயல்பாடுகளை விமர்சித்த பிரபலம்..!

    April 18, 2026

    அரசியல் களத்தில் திடீர் திருப்பம்: “ராகுல்காந்தியைச் சந்திக்க முதல்வருக்கு நேரமில்லை!” – ஆர்.எஸ்.பாரதி அதிரடிப் பேட்டி

    April 18, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரூ. 5,000 டோக்கன்? தோல்வி பயமா? திமுக – அதிமுகவினர் மோதல்..!

    April 20, 2026

    வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் ராஜினாமா.. நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் NTK வேட்பாளர்..!

    April 20, 2026

    பங்குச்சந்தையில் அதிரடி: டாப் 8 நிறுவனங்களின் மதிப்பு ₹1.87 லட்சம் கோடி உயர்வு! முழு விவரம்.

    April 20, 2026

    விஜய் செய்த செயலால் தொண்டர்கள் ஆச்சரியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

    April 20, 2026

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026
    Don't Miss

    சங்கீதா சொன்ன ‘OK’.. விஜய் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்..!

    April 20, 2026

    விவாகரத்து வழக்கு விசாரணையில் காணொளி வாயிலாக நடிகர் விஜய் ஆஜரான நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது; சங்கீதாவின் அடுத்தகட்ட முடிவு குறித்த பரபரப்பு தகவல்.

    வேட்புமனுவில் இல்லாத விஜய்யின் ‘அந்த’ சொத்து.. பிரச்சாரத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராஜு..!

    April 20, 2026

    மகுடம் சூடினார் கோவாவின் சாத்வி சைல்: மிஸ் இந்தியா 2026 பட்டத்தை வென்றுசாதனை!

    April 20, 2026

    மீனவர் விவகாரத்தில் மனிதாபிமான தீர்வு: இலங்கை அதிபரிடம் இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!

    April 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.