Close Menu
    What's Hot

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சதக்.. சதக்.. கள்ளக்காதலில் எல்லை மீறிய மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..!
    கோவை

    சதக்.. சதக்.. கள்ளக்காதலில் எல்லை மீறிய மனைவி.. கணவன் செய்த கொடூர செயல்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    death UTv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் தொழிலாளி ஒருவர் கொடூரமான முறையில் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த திலீபன் (37) என்பவர், சூலூர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்கும், சூலூர் ஸ்ரீ சின்னையன் நகர் பகுதியைச் சேர்ந்த அன்பு எஸ்தர் (37) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

    இன்று அதிகாலை அன்பு எஸ்தரின் வீட்டிற்கு திலீபன் வந்திருந்தபோது, அங்கு வந்த பிரேமானந்த் (54) என்பவர் ஆத்திரமடைந்து திலீபனை தான் வைத்திருந்த கத்தியால் உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

    இதில் திலீபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தடுக்க முயன்ற அன்பு எஸ்தருக்கும் இடுப்பு பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது.

    கொலை செய்த பின்னர், பிரேமானந்த் வீட்டை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, சமையல் எரிவாயு சிலிண்டரைத் திறந்துவிட்டு வீட்டை வெடிக்கச் செய்ய முயற்சி செய்துள்ளார்.

    இதில் ஏற்பட்ட தீ விபத்தில் பிரேமானந்தின் இரண்டு கைகளிலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த சூலூர் காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று காயமடைந்த அன்பு எஸ்தரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து தீக்காயமடைந்த எதிரி பிரேமானந்தையும் காவல்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிரிழந்த திலீபனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    illicit affair murder Sulur crime news Sulur murder case Sulur police investigation Tamil Nadu crime news கள்ளக்காதல் விவகாரம் சூலூர் கொலை சம்பவம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026

    விஜய் சேதுபதிக்கு இப்போ நேரம் சரியில்ல.. எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ் ஆருடம்..!

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026
    Don't Miss

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026

    தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.