பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான படம் கோமாளி. பின்னர் லவ் டுடே படத்தை இயக்கி நடித்தார். படம் சூப்பர் ஹிட் ஆனது மட்டுமல்லாமல் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது.
தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்த டிராகன், அதனை தொடர்ந்து நடித்த ட்யூட் படமும் ரூ.100 கோடி வசூலை தாண்டி ஹாட்ரிக் வெற்றியை பெற்றார்.

வரிசையாக ஹிட் கொடுத்த பிரதீப், தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே படத்தில் நடித்துள்ளார். பட வேலைகள் முடிந்தும், இன்னும் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால், படம் நிச்சயம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பிரதீப்.
இதனிடையே நடிப்பும் வேண்டும், இயக்கத்தையும் விட்டுவிடக்கூடாது என்ற மைண்ட் செட்டில் உள்ள பிரதீப், சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படம் ஒன்றை பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாகவும் அவரே அதில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன் தற்போது ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலருடைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு படத்தில் நடிக்க இவர் 20 கோடி முதல் 25 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் வாங்குவதாக கூறப்படுகிறது.

