Close Menu
    What's Hot

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? அன்புமணி எச்சரிக்கை..!
    தமிழ்நாடு

    திமுக தமிழை வளர்க்கும் லட்சணம் இதுதானா? அன்புமணி எச்சரிக்கை..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Is this the sign of DMK developing Tamil.. Anbumani warns..!..!
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும் என பாமக செயல் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை.

    ஆசிரியர்களே இல்லாத நிலையில், இன்று தொடங்கியுள்ள அகமதிப்பெண் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தை படிக்காமலேயே தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் உயர்கல்வியை திமுக அரசு சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில் தமிழை அறிமுகம் செய்வதாகக் கூறிய திமுக அரசு, முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் படிப்பதை 2021-22ஆம் ஆண்டில் கட்டாயமாக்கியது.

    பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கிய திமுக அரசு, அதற்காக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களை நடத்துவதற்காக 328 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.

    அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி கடந்த திசம்பர் மாதம் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனால், கடந்த இரு மாதங்களாக பொறியியல் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் நடத்தப்படவில்லை.

    Is this the sign of DMK developing Tamil.. Anbumani warns..!..!

    1965-ஆம் ஆண்டில் தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், அன்னைத் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் நடத்திய மொழிப்போரால் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வைப் பயன்படுத்தி தான் 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால், இன்று வரை அன்னைத் தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் திமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

    பொறியியல் படிப்பில் தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கி விட்டு, அப்பாடத்தை நடத்த தற்காலிக ஆசிரியர்களைக் கூட திமுக அரசு நியமிக்கவில்லை என்றால், அன்னைத் தமிழுக்கு திமுக எந்த அளவுக்கு துரோகம் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    இது தான் திமுக தமிழ் வளர்க்கும் லட்சணமா? அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை திமுக அரசு உடனடியாக நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    Anbumani CM Stalin DMK PMK Politics அரசியல் அன்புமணி பாமக முதலமைச்சர் ஸ்டாலின்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    குழந்தைகளை அரசியலில் இழுக்கலாமா?.. விஜய்யை விளாசிய ரங்கராஜ் பாண்டே..! (வீடியோ)

    April 22, 2026

    எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த விஜய்.. ADMK கோட்டையில் TVK-வின் அதிரடி வியூகம்..!

    April 22, 2026

    ரத்தம் வந்தும் சிரித்த முகம்.. விஜய்க்கு ரசிகர்கள் கொடுத்த அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!

    April 21, 2026

    #WeTrustVIJAY மற்றும் #DMKWinningBig.. களத்தை விட இணையத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026
    Don't Miss

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள புதிய சேலை புகைப்படங்கள் மற்றும் அதற்கு எழுந்துள்ள நெட்டிசன்களின் விமர்சனங்கள்.

    தேர்தல் முடிவுக்கு பின் விஜய் உடன் கூட்டணி?.. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் அதிரடி..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.