குஜராத்தைச் சேர்ந்த நமீதா, தெலுங்கில் சில படங்களில் நடித்த பிறகு தமிழில் சித்திக் இயக்கத்தில் விஜயகாந்த் ஜோடியாக ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோலிவுட்டில் இவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தன.
முதல் படத்தில் குறைவான கிளாமர் காட்டிய அவர், அடுத்தடுத்த படங்களில் உச்ச கட்ட கவர்வக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார். சினிமா வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வீரேந்திர சௌத்ரி என்பவரைத் திருமணம் செய்துகொண்ட அவர், சினிமாவில் இருந்து விலகி அரசியலில் (பாஜக) களமிறங்கினார். இருப்பினும், அரசியல் பிரவேசத்தால் சமூக வலைதளங்களில் அவர் கடுமையான விமர்சனங்களையும் ட்ரோல்களையும் சந்திக்க நேரிட்டது.
பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்கத்தில் உருவாகும் ‘டயங்கரம்’ படத்தின் மூலம் அவர் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்க முயன்ற நிலையில், அப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வராமல் பாதியிலேயே தாமதமானது. இந்நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள நமீதா, “நான் வாழ்க்கையில் ரொம்ப கீழ் நிலையில் இருக்கிறேன்; மன ரீதியாக நான் சந்தோஷமாக இல்லை” என்று சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மண்டாடி 1000 கோடி வசூல் செய்ய இதை செய்யணும்.. சத்யராஜ் சொன்ன சீக்ரெட்..!
மேலும், ஹிந்திக்காரர் ஒருவரும், நடிகை பிரியா ராமனும் தன்னைப் பார்த்து ஏன் அழுகிறாய் என்று கேட்டதாகவும், வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் அவர் மனம் நொந்து கூறியுள்ள வார்த்தைகள் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

