அனைவருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளதாகவும், அதை விமர்சிப்பதோ அல்லது விஜய்யைக் குறை கூறுவதோ சரியல்ல என்றும் பத்திரிகையாளர் அந்தணன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சங்கீதா வாபஸ் பெற்றிருந்தாலும், அண்மையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சிகளில் விஜய் கலந்துகொண்ட விதம் குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
‘சேயோன்’ படத்தில் முருகனாக நடிக்கிறாரா சீமான்? வெடிக்கும் சர்ச்சை!
முன்னதாக, பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களது திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சூழல் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரபலங்களின் தனிப்பட்ட முடிவுகள் குறித்து வெளிவரும் தகவல்கள் மற்றும் பொதுவெளியில் அது தொடர்பான விவாதங்கள் குறித்து ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

