‘தேசிய கௌரவ அவமதிப்புத் திருத்த மசோதா, 2026’ (Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) புதிய மசோதா கொண்டுவரப்பட உள்ளது. இதன்படி, ‘வந்தே மாதரம்’ பாடலைப் பாடுவதை தடுப்பவர்கள் அல்லது அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவரப்பட உள்ளது.
தற்போது, தேசிய கீதம் (ஜன கண மன), தேசியக் கொடி மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே சட்டப்பூர்வ பாதுகாப்பை, தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கும் வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா சட்டமானால், வந்தே மாதரம் பாடலைப் பாடுவதைத் திட்டமிட்டுத் தடுப்பவர்கள் அல்லது அவமதிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்.. 54 வகையான உயர் ரக மதுபானங்கள் அறிமுகம்..!
தற்போதுள்ள சட்டத்தின்படி (Prevention of Insults to National Honour Act, 1971), தேசிய கீதத்தை அவமதிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்; அதே போன்ற தண்டனைகள் இதற்கும் பொருந்தும். ஜூலை 20, 2026 அன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு சட்டமாக அமலுக்கு வரும்.

