தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 23ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி கண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் திருச்சி கிழக்கு தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் பதவி விஜய் ராஜினாமா செய்துள்ளார்.
அதற்காக, அவர் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் 234 தொகுதிகளிலும், ஒரு தொகுதி காலியாகிவிட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் 17 வது சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான சட்டமன்றத்தில் எம்எல்ஏக்களின் சராசரி வயது 56 லிருந்து 51 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி சட்டமன்றத்தில் 25 லிருந்து 30 வயதிற்குள் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 7 என்றும், 31 லிருந்து 40 வயதிற்குள் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 42 என்றும், 41 லிருந்து 70 வயதிற்குள் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 166 என்றும், 71 லிருந்து 89 வயதிற்குள் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 19 என்றும், மேலும் தமிழக சட்டமன்றத்தில் 23 பெண் எம்எல்ஏகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

