Close Menu
    What's Hot

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சமூக நீதி பாதையில் புதிய அரசு அமையட்டும்.. முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்ற அன்புமணி..!
    தமிழ்நாடு

    சமூக நீதி பாதையில் புதிய அரசு அமையட்டும்.. முதல்வர் விஜய்யின் வருகையை வரவேற்ற அன்புமணி..!

    Prime ReporterBy Prime ReporterMay 10, 2026Updated:May 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Anbumani Ramadoss Greets New CM Vijay Government
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தின் 14-வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தை தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். உணர்ச்சி பொங்க முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

    பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்! தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள்கள் புழக்கத்தை ஒழிக்க காவல்துறையில் தனி அலகுகள் ஆகியவற்றை அமைப்பதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் இன்றைய தலையாயத் தேவைகள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும், மாநிலம் முழுவதும் தலைவிரித்தாடும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டியதும் தான். அவற்றுக்கு வகை செய்யும் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒழிக்கப்பட வேண்டிய போதைப் பொருள்கள் கஞ்சா, அபின், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் மட்டுமல்ல… அரசின் சார்பில் விற்பனை செய்யப்படும் மது வகைகளும் தான்.

    மதுவால் தான் ஆண்டுக்கு 20 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன; லட்சக்கணக்கான குடும்பங்கள் தலைவர்களை இழந்து நடுத்தெருவுக்கு வருகின்றன. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளையும் படிப்படியாக மூடி தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தின் இன்றைய முக்கியத் தேவைகளில் இன்னொன்று சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாகும். சமூகநீதியில் தமிழகத்தை தனித்துவப்படுத்தி காட்டுவது 69% இட ஒதுக்கீடு தான்.

    ஆனால், உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் கூட சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதிக் கணக்கெடுப்பு நடத்தப்படாததால், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. அதைத் தடுக்க சாதிவாரி சர்வே நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதியே,’’ ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான்.

    அந்த வகையில் சமூகநீதியைக் காப்பதில் ஆளும் த.வெ.க.வும் உடன்படுகிறது. எனவே, இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே எனப்படும் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தவும், அதனடிப்படையில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பது, உரிய அளவில் அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அளிப்பது ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்களுக்கு வரவேற்பு: 69% இட ஒதுக்கீட்டை பாதுகாக்க சமூகநீதி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்!

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய் அவர்கள், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக் கட்டுப்படுத்த சிறப்பு…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 10, 2026

    Anbumani Ramadoss Greetings CM Vijay Wishes New TN Government PMK Anbumani Social Justice Rule Tamil Nadu Political News TVK Leader Vijay அன்புமணி ராமதாஸ் வாழ்த்து சமூக நீதி ஆட்சி தமிழக அரசியல் செய்திகள் தமிழக புதிய அரசு தவெக தலைவர் விஜய் பாமக அன்புமணி முதல்வர் விஜய் வாழ்த்து
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026
    Don't Miss

    புதிய பொறுப்புகள் ஏற்கும் சிம்மம்.. உங்களுக்கு இந்த நாள் எப்படி அமையும்?

    September 26, 2026

    செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.