மஞ்சள் கிழங்குகளை மணிகளாக செதுக்கி செய்யப்படும் மாலை இது மஞ்சள் மாலை
எனப்படும். இவை உடலை இருக்க கூடிய நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இந்த மாலையை அணியப்படுகிறது. பொதுவாக, மங்களகாரமான செயல்கள் நடைபெற அம்பிகையை வேண்டி இந்த மஞ்சள் மாலை அணிகிறார்கள்.
- ஜோதிட ரீதியாக, மஞ்சள் மாலை அணிவது ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் குரு பகவானை (Jupiter) பலப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
- மேலும், மஞ்சள் மாலை அணிவதால், இது கல்வி, செல்வம் மற்றும் நற்பெயரை ஈர்க்க உதவுகிறது.

- முன்னதாக பாக்லாமுகி வாராஹி அம்மன், மற்றும் லலிதாம்பிகை போன்ற தேவியரை வழிபடும்போது மஞ்சள் மாலை அணிவது மிக விசேஷமானதாக கருதப்படுகிறது.
- இது தீய சக்திகளிடம் (Black Magic) இருந்து உங்களை காக்கவும், பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது.

யாருக்கெல்லாம் ‘சங்கு மாலை’ செட் ஆகும்?.. அதீத சக்திகள் இதோ..!
- மஞ்சள் மாலை அணிந்து, திருமணத் தடைகள் நீங்கவும், சுமங்கலி பாக்கியம் நிலைக்கவும் பெண்கள் இந்த மாலையை அணிந்து பிரார்த்தனை செய்வார்கள்.
- மஞ்சள் மாலை ஒரு சிறந்த கிருமிநாசினி மற்றும் இந்த மாலையை அணிவதால் சரும நோய்கள் நீங்குவதோடு, உடலில் இந்த மஞ்சள் மாலை படுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

- குறிப்பாக மஞ்சள் காமாலை போன்ற நோய்களில் இருந்து மீள இது பயன்படுத்தப்படுகிறது.
- மன அழுத்தம் மற்றும் கவலையில் இருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் மஞ்சள் மாலையை அணிவது மனதிற்கு அமைதியையும் நேர்மறை ஆற்றலையும் தரும் என்று நம்பப்படுகிறது.

