அசுரன் திரைப்படத்தில் சிதம்பரம் என்ற ரோலில் நடித்து பிரபலமானவர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் சின்னத்திரை பிரபலம் மற்றும் பாடகி கிரேஸ் ஆகியோரின் மகன்.
தற்போது, இவர் யூத் என்ற திரைப்படத்தை இயக்கிய இளம் வயதிலேயே இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். கென் கருணாஸ்க்கு ஜோடியாக தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!
இயக்குனராக களமிறங்கிய கென் கருணாஸ் தனது முதல் படத்திலேயே மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களத்தை அமைப்பு கலக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளராகும். இவர் இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் இசையமைத்துக் கொடுத்துள்ளார்.

பள்ளி பருவ கதையை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தின் கதை உருவாக்கியுள்ளது. மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் அதிகபட்சமாக 82 கோடி வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ போஸ்டரை பட குழுவை வெளியிட்டனர்.

இந்த ஆண்டு வெளியான படங்களில் பராசக்தி, தாய் கிழவி படங்களை தொடர்ந்து அதிக வசூலை யூத் படம் அள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யூத் படத்தின் முட்டக்கலக்கி பாடல் அதிவேகமாக 100 மில்லியன் வியூஸை கடந்து தற்போது, புதிய மயில்கல்லை எட்டி உள்ளது. அதாவது, 125 மில்லியன் வியூஸை தற்போது கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

