வெயில் காலம் வந்தாலே கை, கால்கள் எல்லாம் கருமையாக மாறிவிடும். இதற்கு சருமமான தொடர்ச்சியாக வெயிலில் வெளிப்படுவது தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அது மட்டும் இன்றி சருமத்திற்கு சரியான பராமரிப்பை கொடுக்காமல் இருப்பதும் இந்த கருமை நிறத்திற்கு ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

முகத்திற்கு கொடுக்கும் அளவிற்கு நாம் சருமத்திற்கான பராமரிப்பை கொடுப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. இதனால், முகத்தை விட கைகளில் உள்ள சருமம் மிகவும் கருமையாக காணப்படுகிறது. இயற்கை பொருட்களைக் கொண்டு உங்கள் சரும பராமரிப்பை மேம்படுத்தலாம். கைகளில் உள்ள கருமையை போக்க சில இயற்கையான வழிகளை பயன்படுத்தலாம்.
வெள்ளரிக்காய் சாறு

கோடையில் கிடைக்கும் வெள்ளரிக்காயை அரைத்து சாறு எடுத்து அதனை 15லிருந்து 20 நிமிடம் கைகளில் தடவி பின்னர், குளிர்ந்து நீரால் கழுவ வேண்டும்.
எலுமிச்சை மற்றும் தேன்

ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து அதை கைகளில் தடவி 15லிருந்து 20 நிமிடம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவலாம். இதன் மூலம் கைகளில் ஏற்பட்டு இருக்கக்கூடிய கருமை நிறம் விரைவில் மறையும்.
கற்றாழை ஜெல்

தினமும் இரவு தூங்கும் முன் கைகளில் தடவ வேண்டும். அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும். மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவணும். இப்படி தினமும் இரவு பயன்படுத்தும் போது கைகளில் உள்ள கருமை நிறம் விரைவில் குணமடையும்.
கடலை மாவு ஸ்க்ரப்

ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்து அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்க்க வேண்டும். பின்பு அதில், காய்ச்சாத பாலை சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு நன்றாக தயாரித்துக் கொள்ள வேண்டும். அதை கைகளில் தடவி பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஜூசை அரைத்து சாறு எடுத்து அதை நேரடியாக கைகளில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அதனை அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர், இதனை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
மஞ்சள் மற்றும் தயிர்

முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!
ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின்னர், கைகளில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குளிந்த நீரால் கழுவ வேண்டும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.
சந்தன பவுடர் மற்றும் பால்

ஒரு கிண்ணத்தில் சந்தன பவுடர் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் பால் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தயாரித்து அதனை கைகளில் தடவி நன்றாக காய வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் உங்கள் சருமத்திற்கு எது சிறந்ததாக கருதப்படுகிறதோ அதனை பயன்படுத்தி பலனை பெறலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

