Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மானாமதுரையில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. திமுக அரசுக்கு அக்கறையே இல்லை.. கொந்தளிக்கும் பா.ரஞ்சித்!
    சினிமா

    மானாமதுரையில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்.. திமுக அரசுக்கு அக்கறையே இல்லை.. கொந்தளிக்கும் பா.ரஞ்சித்!

    Prime ReporterBy Prime ReporterMarch 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    The tragedy that befell the youth in Manamadurai.. The DMK government is not at all concerned Says Pa. Ranjith
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் சாதிய கொடுமைகள் குறித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசு அக்கறையும் காட்டவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், மானாமதுரையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஆகாஷ் (26) கடந்த (06.03.2026) அன்று காவல்துறையினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். கொலை நடந்து மூன்று நாட்கள் ஆகியும் இப்போது வரை சம்மந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருக்கிறது அரசும் காவல்துறையும்.

    4 ஆண்டுகளில் 24 காவல் மரணங்கள் என்பது சாதாரணமாக கடந்துபோகக் கூடிய ஒன்றல்ல என மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்திருந்தது. அதற்குப் பின் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், தற்போது ஆகாஷ் என்கிற இளைஞர்.

    மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருக்கிறது. அதிலும் பட்டியல் சமூக மக்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் அவை இன்னும் அலட்சியமாகக் கையாளப்படுகின்றன. காவல்துறைக்கும் ஆட்சியாளர்களுக்கும் பட்டியல் சமூக மக்கள் மீது எந்தவித அக்கறையும் இல்லையென்பதாகவே இதை புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

    திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. காவல்துறையினர் உரிய நடவடிக்கையோ பாதுகாப்போ அளிப்பார்கள் என்கிற நம்பிக்கையை பட்டியல் சமூக மக்கள் இழந்துவருகிறார்கள். சமூக இயக்கங்களும் மனித உரிமைச் செயற்பாட்டார்களும் நீதிமன்றங்களும் தொடந்து இதனை கவனப்படுத்தி வருகிறபோதிலும் திமுக அரசு இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த முனைப்பும் இல்லாமல் இருக்கிறது.

    ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக – அரசியல் பாதுகாப்பை உறுதி செய்யும் அடிப்படை உரிமைக்காகவே வாக்குரிமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாக்கரசியலுக்காக கூட பட்டியல் சமூக மக்களின் பிரச்சினைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு. எல்லா அதிகார மட்டத்திலும் கைவிடப்பட்டவர்களாகவே பட்டியல் சமூக மக்களின் நிலை இருக்கிறது.

    The tragedy that befell the youth in Manamadurai.. The DMK government is not at all concerned Says Pa. Ranjith

    “அரசியலில் நாம் ‘ஒரு மனிதன் – ஒரு ஓட்டு – ஒரு மதிப்பு’ என்ற சமத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், சமூகமும் பொருளாதாரமும் சமத்துவமற்றதாகவே இருந்தால், இந்த ஜனநாயகம் நீண்ட காலம் நிலைக்காது” என வலியுறுத்தியவர் பாபாசாகேப் அம்பேத்கர்.

    இன்று பட்டியல் சமூக மக்களின் உயிர் பாதுகாப்பே உறுதி செய்யப்படாத நிலையில், இந்த எச்சரிக்கை இன்னும் தீவிரமான அரசியல் கேள்வியாக மாறியுள்ளது. ஆகாஷ் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை எடுத்து, நீதியை உறுதி செய்ய தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். எந்த மக்களின் பிரச்சினைகளை பேச பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டார்களோ அந்தப் பிரச்சினையை பேசாத பட்டியல் சமூகப் பிரதிநிதிகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். பட்டியல் சமூக மக்கள் தம் உரிமைகளை வென்றெடுக்க முன்னெப்போதையும் விட அணியமாக வேண்டிய தேவையும் இருக்கிறது, அதுவே இந்நிலையை மாற்றும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    CM Stalin DMK Pa Ranjith Politics திமுக அரசு பா ரஞ்சித் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.