Close Menu
    What's Hot

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம.. சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு 3 பேருக்கு சிறை..!
    தமிழ்நாடு

    சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம.. சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு 3 பேருக்கு சிறை..!

    Prime ReporterBy Prime ReporterMarch 4, 2026Updated:March 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Court UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை தொடர்பான வழக்கில், இன்று அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. மூன்று இளைஞர்களுக்குச் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், காங்கயம் அமராவதி நகரைச் சேர்ந்த ஜெரின் என்ற பனியன் தொழிலாளி, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். அச்சிறுமியை மூணாறுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோத திருமணம் செய்ததோடு, பல்வேறு அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

    இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், காங்கயம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், மேலும் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. சிறுமி வேலைக்குச் சென்ற இடத்தில், எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த மைக்கேல் ரீகன் என்பவர் அவரிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதும் அம்பலமானது.

    அதேபோல், சிறுமியின் முன்னாள் நண்பரான காங்கயம் வீராணம்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் என்பவர், சிறுமியின் புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி, அந்தச் சிறுமிக்குத் தொடர் அச்சுறுத்தல்களை விடுத்து வந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகிலா அவர்கள், நேற்று மிகக் கடுமையான தீர்ப்பை வழங்கியுள்ளார். சிறுமியை மிரட்டி அத்துமீறலில் ஈடுபட்ட சிவகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    மேலும், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஜெரின் மற்றும் மைக்கேல் ரீகன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜராகி வாதாடிய இந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Justice for 17-year-old girl Mahila Court verdict Minor girl sexual assault case POCSO case verdict Tamil Nadu Prison sentence for accused Protection of Children from Sexual Offences Women's court judgment updates குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை சிறுமி பாலியல் வன்கொடுமை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026
    Don't Miss

    மேஜிக் மீண்டும் திரும்புமா?.. ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் பேசிய நடிகை அஞ்சலி..!

    September 25, 2026

    இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026

    வாயில் வைத்ததும் கரையும்.. கடை சுவையில் வீட்டிலேயே பாதுஷா செய்வது எப்படி?..

    September 25, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.