நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். தற்போது திமுக, பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய்க்கு எல்லாமே பிரச்னையாக அமைந்துள்ளது. கடைசி படம் ஜன நாயகன் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. கூட்டணிக்கு விஜய் கட்சியுடன் எந்த கட்சியும் பேச்சு வார்த்தை நடத்தாததால் கடும் அப்செட்டில் விஜய் உள்ளார்.
இதனிடையே விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விஷயம் காட்டுத்தீ போல பரவி விஜய் முகத்திரையை கிழித்துள்ளது. காரணம் அவர் மனைவி குறிப்பிட்டது நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவை விஜய் வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இந்த விஷயம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் தனக்கு நெருக்கடி கொடுத்தால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் வெளியில் சொல்வேன் என சங்கீத கூறியுள்ளார்.
சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் விவாகரத்து மனு தொடர்பாக யாரும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தவெக கட்சி தரப்பில் வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில், விஜய் தரப்பிலிருந்து சங்கீதாவுடன் சமரச பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த பேச்சுவார்த்தையில், சங்கீதா மற்றும் அவர்களின் மகன், மகள் ஆகிய மூவருக்கும் ரூ.250 கோடி வழங்கும் முன்மொழிவு இடம்பெற்றதாகவும், அதற்குப் பதிலாக விவாகரத்து மனுவை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான தகவலை முன்னணி வார இதழான ‘குமுதம்’ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், சங்கீதா தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. விஜய் தரப்பில் சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்துள்ள இந்த தகவல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

