Close Menu
    What's Hot

    வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!

    May 12, 2026

    எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    May 12, 2026

    விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!

    May 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மோடி திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக… வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
    தமிழ்நாடு

    மோடி திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய திமுக… வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு!!

    Prime ReporterBy Prime ReporterMarch 3, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    DMK sticks stickers on Modi's projects... Vanathi Srinivasan makes sensational allegations
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேசிய பாஜக மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்ணில் தென்படுபவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்க்கும் அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4,000க்கும் அதிகமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.

    The Week ஆங்கில வார இதழ் சார்பில் இன்று (2.3.2026) நடந்த நிகழ்ச்சியிலும் இதைத் தெரிவித்திருக்கிறார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் பணத்திலோ, திமுக அரசின் பணத்திலோ எந்த ஹிந்து கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கவில்லை. ஹிந்து பக்தர்களின் பணத்திலும், கோவில் சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்தும் தான் கும்பாபிஷேகம் நடக்கிறது.

    அதிக வருமானம் வரும் கோவில்களில் மட்டும்தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. வருவாய் இல்லாத கோவில்களில் திருப்பணிகள் செய்ய உள்ளூர் மக்கள், பக்தர்கள் முயற்சி எடுத்தால், அதற்கு அனுமதி கொடுக்க திமுக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை லஞ்சம் கேட்கிறது.

    DMK sticks stickers on Modi's projects... Vanathi Srinivasan makes sensational allegations

    இதுதான் திமுக ஆட்சியில் நடக்கும் யதார்த்தம்.The Week ஆங்கில வார இதழ் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலவச கர்ப்பபைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம், 75 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு போன்ற திட்டங்களைத் தனது அரசின் சாதனையாகக் கூறியிருக்கிறார்.

    இவையெல்லாம் மோடி அரசின் திட்டங்கள்.பிரதமர் நரேந்திர மோடியின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் மட்டும் இதுவரை தமிழ்நாட்டில் 90 லட்சத்து 36 ஆயிரத்து 355 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது.

    மோடி அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதைத் தவிர வேறு எதையும் திமுக அரசு செய்யவில்லை. இதே நிகழ்ச்சியில், வன்முறை, வெறுப்பு பேச்சு, பிற்போக்குவாதம் என பாஜக மீது ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
    முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்களின் புனித சின்னங்களையும், பெண்களையும் இழிவுபடுத்திப் பேசியதை விடவா ஒருவர் வெறுப்பு பேச்சைப் பேசி விட முடியுமா?

    உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் அராஜகம் செய்ததைவிடவா ஒருவர் வெறுப்பை கக்க முடியும்? தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாருக்கு யார் தலைமை தெரியாமல் இருக்கிறார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.

    அதிமுக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என பிரதமர் மோடி கூறியதும் ஒன்றுதான்.

    காங்கிரசுடன் இன்னும் தொகுதிப் பங்கீட்டை திமுகவால் முடிக்க முடியவில்லை. விஜய்யை காட்டி திமுகவை காங்கிரஸ் மிரட்டி வருகிறது. ஒரு சில சதவீத வாக்குகளை வைத்துள்ள காங்கிரஸ் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்ற பலவீனமான நிலையில்தான் திமுக உள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான், யார் கண்ணில் தென்படுகிறார்களோ அவர்களை எல்லாம் கூட்டணியிலும், கட்சியிலும் சேர்த்து வருகிறார். ஆனாலும், காங்கிரஸ் முரண்டு பிடிக்கிறது. திமுக என்ற கட்சியே இப்போது மாற்று கட்சியினரால் நிரம்பியுள்ளது.

    இதனால், காலங்காலமாக திமுகவில் இருக்கும் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். என்னதான் திட்டமிட்டாலும், பொய்களை பரப்பினாலும், ஸ்டிக்கர் ஒட்டினாலும், சிறுபான்மை வாக்குகளுக்காக ஹிந்துக்களை இழிவுபடுத்தினாலும் இந்த தேர்தல் திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும். அதிமுக தலைமையில் ஆட்சி மலரப் போவது உறுதி என குறிப்பிட்டுள்ளார்.

    CM Stalin DMK Politics Vanathi Srinivasan அரசியல் திமுக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் வானதி சீனிவாசன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!

    May 12, 2026

    எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    May 12, 2026

    விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!

    May 12, 2026

    சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!

    May 12, 2026

    முதலமைச்சர் விஜய்யிடம் பிரேமலதா வைத்த முக்கிய கோரிக்கைகள்..!

    May 12, 2026

    விஜய் அரசின் கீழ் புதிய சட்டமன்றம்.. சௌமியா அன்புமணி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    May 12, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆரம்பமே அமர்க்களம்.. சட்டசபையில் முதல்வருக்கு வாழ்த்து மழை..!

    May 12, 2026

    சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!

    May 12, 2026

    முதலமைச்சர் விஜய்யிடம் பிரேமலதா வைத்த முக்கிய கோரிக்கைகள்..!

    May 12, 2026

    வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!

    May 12, 2026

    எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    May 12, 2026
    Don't Miss

    வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!

    May 12, 2026

    தமிழகத்தில் முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

    எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம் கொடுங்கள்.. புதிய அரசுக்கு ஸ்டாலின் விடுத்த முக்கிய வேண்டுகோள்..!

    May 12, 2026

    விமர்சனங்களை வரவேற்போம்.. சபையில் அரங்கேறிய சுவாரஸ்யமான உரையாடல்..!

    May 12, 2026

    சட்டமன்றத்தில் திமுக – தவெக மோதல்?நிர்வாகத்தில் திமுக தான் சீனியர்..!

    May 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.