ஸ்ரீலீலாவுக்கு அடிச்சது ஜாக்பாட்.. அஜித் உடன் இணைந்து பணியாற்றும் உச்ச நட்சத்திரங்கள்!
நடிகரும், கார் ரேஸருமான அஜித் நடித்து சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி ரசிகர்களை திருப்திப்படுத்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம், குடும்ப ஆர்டியன்ஸ்களை கவர தவறிய நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இருப்பினும் வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதாக படக்குழு அறிவித்த நிலையில், மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வரும் நிலையில், ஏராளமான பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். முக்கியமாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

டிரெண்டிங் நாயகி ஸ்ரீலீலாவும், இயக்குநர் மிஷ்கினும் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இசையமைப்பாளர் ஜிபி பிரகாஷ் முக்கிய ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆவலோடு காத்துள்ளனர்.

