சில காதல்கள்… கத்திப் பேசாது. அவை… அமைதியாக மனதில் பதியும். வெறும் காதல் கதை மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையின் உணர்வுகளை அமைதியாக ஆனால் ஆழமாக பேசும் சினிமா
தரமான கதைகளைத் தேர்வு செய்யும் ஜோ திரைப்பட தயாரிப்பாளர்களின் அடுத்த சினிமா முயற்சி… ‘ஹைக்கூ’. நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஜோ, கோழிப்பண்ணை செல்லத்துரை படங்கள் மூலம் கவனம் பெற்ற ஏகன், இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன், மின்னல் முரளி, சேஷம் மைக்கேல் பாத்திமா படப் புகழ் பெமினா சார்ஜ் மற்றும் கோர்ட் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ஜோ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஹரிஹரன் ராம், ஹைக்கூ படத்திற்கு கூடுதல் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குவது யுவராஜ் சின்னசாமி.
இதற்கிடையே, நடிகர் ஏகன் நடிக்கும் ஹைக்கூ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே உலகளாவிய OTT தளமான Netflix( நெட்பிலிக்ஸ் ) கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே நெட்பிலிக்ஸ் டிஜிட்டல் உரிமை வாங்கியிருப்பது, கதை மீதான வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இந்த நிலையில், ஹைக்கூ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில்
பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது.
பேரன்பு, தரமணி போன்ற பாராட்டப்பட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ராம், முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். ‘ஹைக்கூ’… கவிதை போல சொல்லப்படும் ஒரு புதிய காதல் திரைப்படம், இன்று தனது சினிமா பயணத்தை தொடங்குகிறது.

