தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த விவாகரத்து வழக்கை, லண்டனில் இருந்து காணொளி காட்சி (Video Call) வாயிலாக ஆஜரான முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா முழுமையாக வாபஸ் பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சங்கீதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுஜாதா, இந்த வழக்கினை முழுமையாக முடித்து வைப்பதாக அறிவித்தார். இதன் மூலம் கடந்த சில மாதங்களாக இணையத்தில் பேசப்பட்டு வந்த விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!
இரு தரப்பு குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே மேற்கொள்ளப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்பட்டதை அடுத்து இந்தத் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் முடிவினால் தவெக கட்சியினரும், தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக திரிஷாவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையால் இந்த சுமூக முடிவு எட்டப்பட்டதாக ஒரு சில தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த திடீர் முடிவிற்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இருவரும் மீண்டும் இணைந்து வாழப் போகிறார்களா? அல்லது பரஸ்பர சம்மதத்துடன் மீண்டும் மனு தாக்கல் செய்வார்களா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இரு தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வமான விளக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.

