கடந்த சில மாதங்களாக ரவி மோகன் தொடர்பான சர்ச்சைகளால் தொடர்ச்சியான ஆன்லைன் விமர்சனங்களைச் சந்தித்து வந்த கெனிஷா, “நான் யாருடைய குடும்பத்தையும் பிரித்தவர் இல்லை” என்று விளக்கம் அளித்துவிட்டுச் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருந்தார்.
மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!
அந்த அறிவிப்புக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டதாகவும், கெனிஷா சென்னையை விட்டுச் சென்றுவிட்டதாகவும் பல யூகங்கள் பரவின.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் மீண்டும் வந்துள்ள கெனிஷா, “நாளை மீண்டும் தொடங்குகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் “ஓம் நமச்சிவாயா” என்ற பெயரிலான புதிய பாடல் ரிலீஸ் குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளதால், அவர் தனது இசை மற்றும் ஹீலிங் பயணத்தில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

