அரிசியைப் பலமுறை கழுவும்போது, அதிலுள்ள தாமிரம், இரும்பு, துத்தநாகம் மற்றும் வனேடியம் போன்ற நீரில் கரையக்கூடிய சில தாதுக்கள் சற்று குறையக்கூடும். இருப்பினும், அன்றாட ஊட்டச்சத்து தேவையில் அரிசி வழங்கும் இந்த தாதுக்களின் பங்கு குறைவு என்பதால், இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை.
2021-ம் ஆண்டு வெளியான ஆய்வின்படி, சமைப்பதற்கு முன் அரிசியைக் கழுவுவது அதன் மேற்பரப்பில் உள்ள நுண்-பிளாஸ்டிக்கின் அளவை சுமார் 20 முதல் 40 சதவீதம் வரை குறைக்க உதவும். மேலும், மண் மற்றும் நீரிலிருந்து அரிசியில் சேரும் ஆர்சனிக் அளவையும் இது ஓரளவு நீக்க உதவுகிறது.
பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?
தற்போது கடைகளில் விற்கப்படும் அரிசி சுத்தப்படுத்தப்பட்டு பேக் செய்யப்பட்டு வருவதால், அதை மிகக் தீவிரமாகப் பலமுறை கழுவ வேண்டிய அவசியமில்லை. அரிசியை மிகவும் தேய்த்துப் பலமுறை கழுவுவதற்குப் பதிலாக, ஒன்று அல்லது இரண்டு முறை மென்மையாக அலசுவது சிறந்த நடைமுறையாகும். இது அதிகப்படியான ஊட்டச்சத்து இழப்பைத் தவிர்ப்பதோடு, தேவையற்ற அழுக்குகள் மற்றும் நுண்-பிளாஸ்டிக் துகள்களையும் அகற்ற உதவும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

