பிரபல யூடியூபர் இர்ஃபான் மீது மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை பாய்கிறது.
அதாவது, பிரபல உணவு மற்றும் டிராவல் வ்லாக்கரான யூடியூபர் இர்ஃபான், தனது வரவிருக்கும் குழந்தையின் பாலினத்தை (Gender Reveal) வெளிப்படையாக அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக, இந்தியாவில் பிறப்பதற்கு முன்பே சிசுவின் பாலினத்தைக் கண்டறிவது மற்றும் அதனைப் பொதுவெளியில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும் (PC & PNDT Act). வெளிநாட்டில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதனைத் தமிழில் வீடியோவாக வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வுக்கு மாறான தாக்கத்தை ஏற்படுத்தியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணி ரத்து.. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பப் பணி நியமன அரசாணை ரத்து..!

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் சார்பில் விளக்கம் கோரப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மருத்துவமனை விதிகளை மீறிப் பிறந்த குழந்தையின் தொப்புள்கொடியை நீக்கிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய இர்ஃபான், தற்போது பாலினத்தை வெளிப்படுத்தியதன் மூலம் மீண்டும் சுகாதாரத்துறையின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார். இதுகுறித்து அவர் மீது தகுந்த சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

