நடிகர் தனுஷின் ரசிகர் மன்றம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய கொடி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் ரசிகர் மன்றத்தின் புதிய கொடி, ஒரு அரசியல் கட்சியின் கொடியைப் போல கம்பீரமான வடிவமைப்புடன் இருப்பதாகச் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இது தனுஷ் அரசியலுக்கு வரத் திட்டமிடுகிறாரா என்ற ஊகங்களைக் கிளப்பியது.
சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் நடிகர் தனுஷைச் சந்தித்த செய்தியாளர் ஒருவர், “புதிய கொடியை அறிமுகம் செய்துள்ளீர்களே, இது பிற்காலத்தில் அரசியல் கட்சியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
விமர்சனங்களைக் கண்டு விஜய் அஞ்சவில்லை.. முதல்வர் விஜய்க்கு ஆதரவாகப் பேசிய சஞ்சீவ்..!
இந்தக் கேள்விக்கு தனுஷ் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. மிகவும் அமைதியாக, மவுனம் காத்தபடி தனது காரை நோக்கிச் சென்று அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த அமைதி ரசிகர்களிடையே மேலும் பல யூகங்களை உருவாக்கியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “இந்தக் கொடி புதியதல்ல, கடந்த 15 ஆண்டுகளாகவே நாங்கள் இதைப் பயன்படுத்தி வருகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனுஷ் தரப்பிலிருந்து இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்போ அல்லது விளக்கமோ இன்னும் வெளியாகவில்லை. எனவே, இது வெறும் ரசிகர்களின் உற்சாகமான செயல்பாடு மட்டுமே என்பது தற்போதைய நிலவரமாகும்.

