தஞ்சை ஆத்துப்பாலம் அருகே காந்திஜி சாலையில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் மினி பேருந்து சென்றுள்ளது. அந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்து உள்ளே ஒருவருக்கொருவரை தாக்கி கொண்டுள்ளனர்.
இதனால் ஓட்டுநர் பேருந்தை சாலையின் நடுவே நிறுத்தி உள்ளார். அப்போதும் மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் தாக்கி கொண்டனர். மிகவும் பரபரப்பாக காணப்படும் சாலையில் மாணவர்கள் தாக்கி கொண்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்டர் மீடியத்தில் ஏறிய அரசுப் பேருந்து.. பயணிகளின் அலறல்.. நடந்தது என்ன?..
மாணவர்கள் தாக்கி கொண்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்ட போது இது குறித்து புகார் எதுவும் வரவில்லை அதனால் வழக்கு பதிவு செய்யவில்லை – நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

