இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறுதிச்சடங்கின் போது இயக்குநர் பார்த்திபன் கூறிய கருத்து இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது குருவான பாக்யராஜின் மறைவு பார்த்திபனை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதிச்சடங்கின் போது, பாக்யராஜ் பயன்படுத்திய ‘பேட், பேனா, பேப்பர்’ ஆகியவற்றை அவரது இதயத்திற்கு அருகில் வைத்தது, பலரையும் உருக்கியது.
இறுதிச்சடங்கில் இருந்த தயாரிப்பாளர் கண்ணன் ரவியிடம், “அப்போது நீங்கள் செய்தது பத்தாது, இப்போது சாந்தனுவை வைத்து படம் எடுங்கள்” என்று பார்த்திபன் கூறியது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
பப்ளிசிட்டிக்காக இப்படியா? முருங்கைக்காய் அஞ்சலி.. சர்ச்சையில் சிக்கிய கூல் சுரேஷ்..!
தந்தையின் இழப்பில் இருக்கும் சாந்தனுவிடம், ஒரு துக்க நிகழ்வில் வைத்து அவரது கரியர் குறித்தும், வெற்றி குறித்தும் பேசுவது முறையானதா? இது சாந்தனுவுக்கு மேலும் மன அழுத்தத்தை மட்டுமே தரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்யராஜ் சாருக்குச் செய்யும் நன்றி கடனாகவே தான் அவ்வாறு பேசியதாகவும், திறமையை மீறி வெற்றி மட்டுமே கொண்டாடப்படும் இந்தத் திரையுலகில், சாந்தனு வெற்றி பெற வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே தான் அவ்வாறு கூறியதாகவும் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். துக்கமான சூழலில் சொல்லப்பட்ட ஒரு கருத்து, தற்போது சாந்தனுவின் எதிர்காலம் குறித்த விவாதமாக மாறியுள்ளது.

