இறந்த செல்கள் தேங்குவது, ஷேவிங் செய்வது, இறுக்கமான ஆடைகள் மற்றும் கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதால் சிலருக்கு அக்குள் பகுதி (Underarms) அதிக கருமையுடன் காணப்படும். இந்த கருமையை வீட்டிலுள்ள எளிய இயற்கை பொருட்களைக் கொண்டே எளிதாகப் போக்க முடியும்.
அக்குள் கருமையை நீக்கும் 5 எளிய வழிகள்
- 2 டேபிள் ஸ்பூன் தயிருடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அக்குளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (வாரத்திற்கு 2-3 முறை).
- உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி கருமையை நீக்க உதவும். உருளைக்கிழங்கு துண்டைக் கொண்டு அக்குளில் 10-15 நிமிடம் தேய்த்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். (2-3 வாரங்கள் தினமும் செய்யலாம்).
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பேஸ்ட் செய்து, அக்குளில் 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (வாரத்திற்கு 2-3 முறை).
ஒரே வாரத்தில் சீரற்ற சரும நிறம் மாறணுமா? மேஜிக் ஃபேஸ் பேக்..!
- 3 பங்கு பேக்கிங் சோடாவுடன் 1 பங்கு நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஈரமான அக்குளில் 2-3 நிமிடங்கள் மென்மையாக ஸ்க்ரப் செய்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். (வாரத்திற்கு 2 முறை).
- ஒரு பங்கு ஆப்பிள் சீடர் வினிகருடன் இரண்டு பங்கு நீர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். தினமும் குளித்த பிறகு அக்குளில் ஸ்ப்ரே செய்து காய வைக்க வேண்டும்.
சென்சிடிவ் சருமம் (Sensitive skin) கொண்டவர்கள், இந்த இயற்கை பேக்குகளைப் பயன்படுத்தும் முன் கைகளில் தடவி ‘பேட்ச் டெஸ்ட்’ (Patch test) செய்து கொள்வது நல்லது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTN NOW பொறுப்பாகாது.

