இயக்குநர் இமயம் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் மறைந்ததால் ஏற்பட்ட மனச்சோர்வும், உடல்நலக் குறைவும் அவரது மறைவுக்குக் காரணமாயின. சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், விஜய், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஆசைப்படி, தேவதானிப்பட்டி அருகே உள்ள பண்ணை வீட்டில் இன்று உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
சென்னையில் பாரதிராஜா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, அங்கே துக்கத்தையும் பொருட்படுத்தாமல் கேமராவை நீட்டிய நபரைக் கண்டு கோபமடைந்தார். ‘என்னய்யா இது.. அசிங்கமா இல்ல’ என்று அவர் காட்டமாகப் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“துக்க வீட்டிலும் வியூஸுக்காக கேமராவைத் தூக்கிக்கொண்டு அலைபவர்களுக்கு இந்த மாதிரியான அதட்டல்தான் சரியான ட்ரீட்மென்ட்” என்று ரசிகர்கள் தியாகராஜன் குமாரராஜாவின் செயலைப் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.
பாரதிராஜா வீட்டுக்கு Camera தூக்கிட்டு வந்த மீடியாவ "அசிங்கமா இல்ல உங்களுக்கு"னு கேட்ட தியாகராஜன் குமாரராஜா 👌 pic.twitter.com/XEDyEj8Q4l
— Akilan Tamilanin Cinema (@TamilaninCinema) June 11, 2026

