தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்று உள்ளார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் மு க ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆகியோரை மரியாதை நிமித்தமாக நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
முதலமைச்சரின் அரசியல் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெறுவது அரசியல் நாகரீகம் என்று பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில், இன்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் வாழ்த்து பெறுகிறார். அந்த வகையில், முதலில் சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி அலுவலகத்திற்கு முதலமைச்சர் விஜய் சென்றார்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் இன்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். திருவல்லிக்கேணியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்ற முதலமைச்சர் விஜய் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வரவேற்றார். மேல் இட பொறுப்பாளர் கிரிஷ் வெங்கடேஷ் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து வரவேற்றார். அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் படத்திற்கு முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினர். முன்னதாக காங்கிரஸ் அலுவலகத்தில் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருகிறது.

